...

11 views

என்னானேன் தெரியுமா??
என் இதயம்
லாவா முலாம் பூசப்பட்ட
முட்டை...

காண்பவர்கள்
கண்ணுக்கு எரிமலைபோலே
தெளிவாய் தெரியும்...

கல்லெறிந்துப்
பார்த்தவர்களுண்டு...

கச்சிதமாய் கைகொண்டுத்
தூக்கியவள் நீ மட்டும்தான்...

வெளிச்சம் கண்டு
வெளிச்சுடுமென
அஞ்சியவர்கள்
பலர் இருக்க...

உன் அன்பின் குளிரால்
ஆதிக்கம் செய்யத்
துணிந்தவள் நீதான்...

நான் அடர்ப்புகையாய்
அயராது புகைந்தேன்...

அடச் சும்மா இருடாவென
அசட்டுத்தனமாய்
ஊதி விட்டாய்...

கொப்பளித்துத் தகிக்கும்
குழம்புகள் எரிமலையினும்
கொடிதாய் வெடித்துத்
தெறித்ததுண்டு என்னில்...

உன் இதழின்
கொஞ்ச ஈரத்தால் நீ
எனை கொடுமையாய்
நமத்துப் போகச் செய்ததென்ன???

எரிந்திடும் எனை
கண்டவர் மத்தியில்...

எனக்குள் உள்ள
மென்மையுணந்து
எந்தன் கரு புகுந்தது
நீ மட்டும்தானடி...

என்னவளே...

என்னுள் நீ வந்தபின்னர்
என்னானேன் தெரியுமா???

எந்தன் உறைநிலையை
நான் சொன்னால்
உனக்குப் புரியுமா..??

உயிருள்ளவரை
நான் இருப்பேன்...

நீ என் உயிராய் உள்ளபோது
நான் எப்படி மரிப்பேன்...

-முத்தரசு மகாலிங்கம்©
~*~