...

1 views

நினைவுகளின் ஓட்டப்பந்தயம்
ஓடுகளத்தில்
நினைவுகள் துரத்த
நினைவுகள் ஓடுகின்றன

அதை நினைவுகள்
காலரியில் இருந்தும்
லைவ் டெலிகாஸ்ட்டிலும்
பார்வை இடுகின்றன

போட்டியின் நடுவராகவும்
நினைவுகளே நியமிக்கப்பட்டுள்ளன

வெற்றி பெற்ற நினைவுகளை
கார்ப்பொரேட் நினைவுகள்
வியாபார யுத்தியாக
விளம்பரப் படங்களுக்கு
புக்கிங் செய்கின்றன

வேண்டுமென்றே
தோற்ற நினைவுகளுக்கு
பின்புலத்தில்
மேட்ச் பிக்ஸிங் நினைவுகளின் வெகுமதிகள்
வெளிநாட்டு கரன்சிகளில் வழங்கப்படுகின்றன

தோற்ற நினைவுகளும்
வென்ற நினைவுகளும்
வெளிநாட்டு ஹோட்டல் பார்களில்
கை குலுக்கி
ஷாம்பெய்ன் குலுக்கி
உனக்கு எவ்வளவு லாபம்
எனக்கு எவ்வளவு லாபம்
-என கணக்குப் பார்க்கின்றன

அடுத்த முறை
யார் ஜெயிப்பது
யார் தோற்பது?
மேட்ச் பிக்ஸிங்கில்
இன்னும் அதிகம் கொடுக்க
முன்வரும்
எந்த மேட்ச் பிக்ஸரை
ப்ரொமோட் செய்வதென்று மேட்ச் பிக்ஸர்களையே
பிக்ஸிங் செய்கின்றன


© iAmRangz