...

33 views

விடியலை தேடி
அடுபுடும் பெண்ணுக்கு
படிப்பெதற்கு என்றான் அப்போது
படித்து பட்டம் வாங்கியபின்
உன்னைச் சமையல் அறையில்
பூட்டி வைகின்றான் இப்போது

ஆணும் பெண்ணும்
சமமெனச் சொன்னான்
ஏனோ அடுப்பங்கரைக்கு மட்டும் அரசியாகினால் இவளை

கல்லூரி பருவத்தில் கனவு கண்ட பெண்ணே
உன் கனவுகளை எங்கே
நீ துளைத்தாய்
மளிகை பூ மயக்கத்திலா
இல்லை தன் மழலை
முகம் பார்த்தாலா

உன் கனவுகளைத் தேடி
வாழத் துடங்கு என் பெண்ணே
கரண்டி பிடித்துக்கொண்டே கணினி வேலையும் பார்த்துக்கொள்ளலாம்

கணவனுக்காகக் கொஞ்சம் பின்னர் பிள்ளைக்காகக் கொஞ்சம்
என வாழ்ந்தது போதும்
சற்று நேரம் உனக்காகவும் வாழ்ந்திடுவாய்

நீ தொலைத்த கனவுகளைத் தோண்டி எடுப்பதும்
இல்லை எறிப்பதும்
உன் கைகளில் மட்டுமே உள்ளது
பெண்ணே உனக்கான
புதிய பாதை இதோ
நடந்து செல்வாய்
உன் விடியலை தேடி

© Kanjanaa Viswanathan