...

11 views

இந்தக் காதல் கருமாந்திரம் படுத்தும் பாடு
என் உறக்கத்தை
அடித்துத்துரத்தி
துரத்தியடித்து
ஆர்ப்பாட்டம் செய்கின்றன
நின் நினைவுகள்

இமைகளை
இணைத்தே தீருவேன்
-என்று
கங்கணம் கட்டிக் கொண்டு
களைப்பை
கட்டாயத் தோழனாக்கிக் கொண்டு
இமைகளின் மீது ஏறி
குந்திக் கொண்டு
அடம் பிடிக்கின்றது உறக்கம்

இந்தப் போராட்டத்துக்கு
இடையில்
சிக்கிக் கொண்டு
தவிக்கின்றேனடி

அவ்வப்போது
மெஜாரிட்டி காட்டி/முடியாமல்;
அவ்வப்போது
ஆட்சியைப் பிடித்து/இழந்து
இரண்டும்
ஒரே களேபரம்

நேற்றைய இரவு
எனக்கு மட்டும்தான் அல்ல
+
நேற்றைய இரவு மட்டும்தான்
எனக்கு இப்படி அல்ல
😉🤗🤭🤫

© iAmRangz