...

11 views

சாயங்காலம்
#WritcoPoemPrompt34
தொலைவில் உள்ள மலையின் விளிம்பில்,
பள்ளத்தாக்கிற்கும் சோம்பேறி நதிக்கும் இடையில்,
வாசனை புல்வெளியின் விளிம்பிற்கு அப்பால்,
மறையும் சூரியன் வரைந்த சாயல்களை என்னால் பார்க்க முடிகிறது...

மேற்திசை வாயிலின் மூலை இடுக்கில் தொலைதூர கடலுடன் முத்தமிட்டு தழுவி கொண்டிருக்கும் வானவளையத்தில் செந்நிற கதிர்களை பரப்பி அழகிய அந்தி வானப்பொழுதை அலங்கரித்தான் கதிரவன்

கரையும் காகங்களின் இரைச்சலுடன் பட்சிகள் குடிச்செல்கின்றன அந்த ஆதவனின் மறைவை கண்டு மேய்ச்சல் நில புல்வெளியில் களை உண்டு பண்ணை செல்லும் மாடுகளின் கூட்டமும் சிலுசிலுத்த மெல்லிடை காற்றில் மேனி நனைய நிறைவுற்ற தொழில் முடிந்து வீடு செல்கிறது மனித குலம்

© ரா.சஞ்சிதா