...

4 views

நீல வானம் நீலக் கடல்
நீல நிறத்தை நீக்க
முயன்று கொண்டிருந்தது
நீலக் கடல்

மேகங்களைக் கூப்பிட்டு
நீரோடு நீலத்தை
முகந்து செல்லச் சொன்னது

சரி என்று எடுத்துச் சென்றால்_
அங்கு நீல நிறத்தை நீக்க
முயன்று கொண்டிருந்தது
நீல வானம்

அதுவும்
மேகங்களைக் கூப்பிட்டு
மழையோடு நீலத்தை
கரைத்து ஊற்றச் சொன்னது

இருதலைக் கொள்ளி எறும்பாய்-
இரண்டு பக்கம் அடி வாங்கும் மத்தளமாய்-
பாவம் மேகங்கள்:
பண்டமாற்றில் ஈடுபட்டுள்ளன
பன்னெடுங்காலமாய்

நீலம் போய்
நீலம் வந்து
நீலம் நீங்கிய பாடில்லை
நீலக் கடலுக்கும்
நீல வானுக்கும்
😉🤗🤭🤫

© iAmRangz