...

1 views

துரத்தும் நினைவுகள்
நினைவுகள் துரத்த
பின்னங்கால் பிடரியில் பட
ஓடி ஓடித் தப்பித்துக் கொள்ளலாம்
எனப் பார்த்தால்_

பின்னர்தான் புரிந்தது-
துரத்திய நினைவுகள்
மீதி நினைவுகள் அமைத்த
சக்ர-வ்யூகத்திற்குள்
அதன் மையத்திற்குக்
கொண்டு வந்து சேர்க்கத்தான்
துரத்தி இருக்கின்றன -என்பது

இப்போது
க்ருக்ஷேத்ர யுத்த களத்தில்
கௌரவ சேனைக்கிடையே
நடுவில் சிக்கிக் கொண்ட
அபிமன்யு'வென
செய்வதறியாது
திகைக்கிறேன்

அப்போதுதான் அறிந்து கொண்டேன்
என் நினைவுகளுக்குள்ளேயே
கௌரவ பாண்டவ
பங்காளிச் சண்டைகள் இருக்கின்றன என்பதை


© iAmRangz