...

10 views

க(வி)தை
கவிதைகள் கவிஞர்களாலும் கதைகள் கதாசிரியர்களாலும்
எழுதப்படுகின்றன...
எழுதப்பட வேண்டும்

கவிஞர்கள்
கதை எழுதுகையில்
எங்கிருந்தோ வந்து விடுகின்றன
எதுகையும் மோனையும்
சந்தமும்

கதாசிரியர்கள்
கவிதை புனைகையில்
வாக்கியங்களை
மடித்துப் போட்டது போல்
உதைக்கிறது கொஞ்சம்
உரைநடைத்தனம்

கவிஞன் பாதி
கதாசிரியன் பாதி எனில்
ஏழெட்டு பாட்டு
ஏழெட்டு சண்டை
நடுவில் கொஞ்சம் கதை -என தெலுங்குப் படமாகி விடுகிறது

இயலாளர்களும்
இசையாளர்களும்
மாறுதலுக்கு உட்படும்போதும்
ஒருங்கிணையும் போதும்
அவரவர் பணியை
அவரவர் செய்யும்போதும்
அங்கு நாடகம் உருவாகிறது


© iAmRangz