...

6 views

ஒன்றையொன்று கொன்றுதின்று
தெரு முனையில்
தீப்பந்த வெளிச்சத்தில்
அவசர அலங்கோலமாய் அரிதாரம் பூசி
காட்டுக்கத்தாய்க்
கத்திப்பாடிய
கூத்தாடி

அவன் பிழைப்பைக்
கெடுக்க வந்து
கொட்டகை அமைத்து
கட்டணம் வசூலித்து
ஆணுக்குப் பெண் வேடமிட்டு
அப்புறம் பணத்தாசை காட்டி நடிகைகளை உருவாக்கி
மைக் வைத்து
பேக்ட்ராப் சீன் மாற்றிய
நாடகக்குழுக்களின்
குரல்வளையை
சினிமா நசுக்க

தொலைக்காட்சி
வலைத்தள ஓ டி டி -யென
வரிசையாய்
ஒன்றையொன்று கொன்றுதின்று
கொழுக்கின்றது

அறிவியல் வளர்ச்சி

மக்களிடம் இருந்து
கூடுதல் நேரத்தைக்
களவாடியபடி

© iAmRangz