...

8 views

அண்ணன் தங்கை உறவு
ஆணுக்கு பெண் நிகர் என்று காட்ட ஆண்டவன் தந்த வரம் அண்ணன் தங்கை என்ற உறவு

கோடி உறவுகள் அகிலத்தில் நிறைந்திருக்க அனுதினம் நான் தேடும் உறவு நீயாவாய்

ஆசான் தேவை இல்லை எனது விருப்புக்கு உன் அண்ணன் அன்பு ஆகாது என்றும் வெறுப்புக்கு

கேட்டு பெறும் அன்பை விட கேட்காமல் பெறும் உனது அன்பு என்னிடத்தில்

தூக்கி அனைத்த கரம் இது என்றாலும் உன் துன்பத்தில் அது ஓர் கைத்துடைப்பம் தான்

நீலவானின் இருளை தனிக்கும் முழு மதி போல் என் வாழ்வை செம்மைப்படத்தியவள் நீ

தொப்புள் கொடியில் மலர்ந்த பந்தம் இது சொந்தங்கள் இருந்தும் சுகமில்லை என் தங்கை நீ இருக்க தாய்மடி தேவையில்லை

என் விழிகள் கண்ணீரில் நனைய அவள் கருணை வெள்ளத்தில் திழைக்க அடைக்கலம் தருகிறாள்

உன் கண்ணீரின் ஒரு துளி நீர் என் உதிரத்தின் உயர் உச்சம்

ஆசைகள் பல தீர்க்க என் அன்பு முழுவதையும் பறைசாற்றுவேன் உன்னிடத்தில்

சண்டைகள் போட்டிருக்க சமாதானம் கோருகிறது மனம் உன்னிடத்தில்

அடம் பிடிக்கும் தருணங்களில் அன்பை பகிரும் காதலனாய் உன் உள்ளத்தில் மலர்ந்திருப்பேன்

அச்சம் தவிர்க்க ஆயுள் முழுவதுமாய் அண்ணன் நான் இருப்பேன் என்றும் உன் துணையாய்

© ரா.சஞ்சிதா