...

2 views

பொக்கிஷமான நட்பு-13
அவள் கண்ணீரை துடைத்து, மெல்ல மெல்ல அவள் அறையிலிருந்து வெளியே வந்தாள். கிட்ட வர வர அந்த கதவு சத்தத்தால் அவள் நடுங்கி போய் நின்றாள்! முகமெல்லாம் வேர்த்து கொட்டியது. கதவு தட்டும் சத்தம் மட்டும் ஒளித்து கொண்டே இருந்ததே தவிர யாருடைய குரலும் அவளுக்கு கேட்க வில்லை. அது அவளுக்கு இன்னும் பதற்றத்தை ஏற்படுத்தியது! அவள் கதவை  மெதுவாக  திறந்த நொடியில் அவள் தொலைபேசியிலிருந்து அழைப்பு வந்தது. கதவில் இருக்கும் அவள் கை வேகமாக நடுங்க தொடங்கியது! "அய்யயோ இப்போ போய் எனக்கு ஃக்கோல் வருதே. திவ்யாவா தா இருக்கோ, கதவ வேற லேசா தொரந்துட்டனே..." என்று அவள் இருதயத்தில் நினைத்தாள்! பயத்தின் உச்சக் கட்டத்திலிருந்து கண்களை மூடி கதவை முழுமையாக திறந்தவுடன் "சேப்ராஸ்...." என்று அவள் குடும்பமும் திவ்யாவும் அலற பிரியா அதிர்ச்சியில் மயங்கி விழுந்தாள்! இந்த சம்பவம் எல்லாருக்கும் ஒரு பயத்தை ஏற்படுத்தியது! எல்லாரும் "பிரியா பிரியா பிரியா!" என்று கண்ணீரோடு அழறினார்கள்! திவ்யா ஓடி போய் தண்ணீர் எடுத்து வந்து பிரியா முகத்தில் தெளித்தாள் பிரியா மெல்ல மெல்ல அவள் கண்களை திறந்தாள். எல்லாரையும் சுற்றி பார்த்தாள். உடனே அவள் குடும்பத்தினர் எல்லாரும் அவளை பார்த்து "பிரியா உனக்கு ஒன்னும் இல்ல தான?" அதற்கு பிரியா மெதுவா "ம்ம்ம் நா ஓக்கே தா" என்று சொன்னாள். "நா நேத்து தா யாரோ கதவு தட்டுர மாதிரி கனவு கண்ட, கனவுள கதவு தொரந்து பாத்தா அது திவ்யா அப்புரம் எழுஞ்சி பாத்த மணி விடியற் காலையில 4, இவளுக்கு க்கோள் பண்ண எடுக்கல" என்றாள் பிரியா, அதற்கு திவ்யா "அச்செச்சோ சொரி டீ எக்சலி உன்னோட பொறந்தனாலுக்கு சேப்ராஸ் ஷொக் குடுக்கலாம் னு நினைச்ச அதான் டீ"  க்கோல் ல எடுக்கல ஆனா ஒனக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்துருக்கோ எனக்கு தெரியாது டீ சோரி..." என்றாள்.   
அதற்கு பிரியா "இல்ல இல்ல பருவாள என்ன சந்தோஷ படுத்த தான இப்படி செஞ்சீங்க, நா ரொம்ப சந்தோஷமா இருக்கே..." என்றாள். "அது போதோ மா எங்களுக்கு இப்படியே எப்போமோ சந்தோஷமா இரு மா" என்றார் திரு மோகன் ராஜ். "ம்ம் சரிங்க அப்பா கண்டிப்பா" என்றாள் பிரியா. "ஆமா மா உங்க அப்பா சொல்லுறதும் சரிதா மா இத்தன வருஷ நீ இவ்வளோ கஷ்ட பட்டு படுச்சி உன் குடும்பத்தையும் பார்த்துகிட்ட மா கடவுள் உனக்கு எப்போமே துணையா இருப்பாரு மா" என்றார் திருமதி மாலினி "சரி மா கண்டிப்பா." என்றாள் பிரியா "சரி சரி வாங்க எல்லாம் போய் கோக் கட் பண்ணிட்டு என்ஜாய் பண்ணுவோம் " என்றார் மதன். எல்லாரும் பிறந்தநாள் பாடலை பாடியவுடன் கேக் கட் பண்ணாள் பிரியா. சிறிது நேரம் கழித்து அவர்கள் எல்லோரும் பிரியாவுக்கு பிறந்தநாள் பரிசுகளை கொடுத்தனர்.  "எல்லாருக்கோ டேங்கியு சோ மாச் என் வாழ்க்கையில மறக்க முடியாத பேஸ்டே இது" என்று ஆனந்தமாக சொன்னாள் பிரியா. 
மலைபோல் வந்த துன்பங்கள், 
பனிபோல் கரைந்து, 
வானத்தில் தோன்றும் நிலா போல் இவர்கள் வாழ்க்கை பிரகாசிக்க தொடங்கியது... 

தொடரும்...

#writcostory
#frienship
#family

© Dana Hephzibah