...

0 views

பார்த்து நடந்துக்கோங்க
சண்டையின் போது பெண்கள் (காதலியோ, மனைவியோ) ஏன் கணவனிடமும், காதலனிடமும் தங்கள் தவறுகளை ஒத்துக் கொள்வதில்லை?

ரியல் எஸ்டேடில் பணத்தை இழந்து கொஞ்சம் கஷ்டமான சூழ்நிலை…

அப்போது நாங்கள் வாடகை வீட்டில் இருந்தோம்.
(திருமணம் ஆனதில் இருந்தே வாடகை வீடுதான்)
மேல house owner...
கீழே நாங்கள்

இரவு 10 மணியளவுல என் மனைவி வேலையெல்லாம் ஒழிச்சி போட்டுட்டு படுக்கையறைக்கு வந்தா.

நான் டி.வி பார்த்துட்டு இருந்தேன்.
பசங்க தூங்கிட்டு இருந்தாங்க.
அவள் வழக்கமா சாப்பிடும் 2 வாழைபழத்தில் ஒன்று திருடி சாப்டுட்டு இருந்தேன்.
முறைத்தபடியே பக்கதுல உட்கார்ந்து மீதி இருக்கும் பழத்தை சாப்டா.

பிறகு சகஜமா பேச ஆரம்பித்தா.
அது எங்கெங்கோ சுற்றி ஒரு கட்டத்துக்கு வந்து நின்னுச்சு.

~ என்னங்க…💗

ம்….ம்…💗

~ எப்படியாவது ஒரு வீட்டுமன வாங்கிடனுங்க💗

வாங்கிட்டா போச்சு💗

~ நமக்குனு சின்னதா கச்சிதமா ஒரு வீடு கட்டிடனுங்க வாடகை வீட்டில் இருக்க கூடாது💗

கட்டிட்டா போச்சுடி…💗

~ வீட்ட சுத்தி காம்பௌண்ட் போட்டுடனுங்க💗

இவ்ளோ பண்றேன் அதை செய்ய மாட்னா, போட்டு தரேன்டி.💗

~ காம்பௌண்ட் போட்ட பிறகு அதுல ஒரு மாங்கன்னு,
தென்னங்கன்னு வக்கினுங்க...💗

அதுக்கென்னடி, மாஞ்செடி தென்னஞ்செடி வாங்கி தரேன் வெச்சிக்கோ செல்லம்.💗

~ஆமாங்க. எங்க தாத்தா-வ கூப்டு அவர் கையால வைக்கனுங்க.

ஏன்டி இத வக்கிறதுக்கு உன் தாத்தாவ கூப்பிடனுமா, வேலூர்ல இருந்து கார் வச்சி கூப்ரதுக்கு, இங்க இருக்கற எங்க அப்பன கூப்டா வச்சி வுட்டு போறாரு.

~ ஏதே…உங்கப்பனா…அந்த குடிகாரன்… வச்ச வெளங்குமா😡

ஏன் ………..மிலிட்ரி சரக்க அடிக்கற உன் தாத்தன் வச்ச மட்டும் வெளங்குமோ😡

~என் தாத்தாவ பத்தி பேசாதிங்க பொல்லாதவள ஆய்டுவேன்😡

ஆமா பெரிய மைசூர் ஜமீனு…
பேச கூடாதாம்...
சர்தான் போடி😡

~ஏன் அந்த ஜமீன் வூட்ல வந்து பொண்ண கொடுங்கனு பொண்ண குடுங்கனு பத்து தடவ நடந்தீங்கள. அன்னக்கி தெரியலையோ😡😡

ஆமா அப்படிய அஞ்சி மூனு அடுக்கா கொடுத்து தள்ளி கிழிச்சிட்டான் உங்கொப்பன்😡😡

~எங்கப்பன பத்தி பேசாதிங்க அவ்ளோதான் சொல்லிட்டேன். "அன்னிக்கே சொன்னேன் வூடு இல்லாதவனுக்கு வாக்க படமாட்டேனு😭😭😡😡

ஆமா நான்தான் வந்து கால புடிச்சனா…உங்க அக்கா வூட்காரன்தான்டி என் மச்சினிய கட்டிகோ நல்லாயிருப்பே நல்லாயிருப்பேனு கெஞ்சினான்…😡😡

இஎதோ பாருங்க இதுக்கு மேல பேசுனா உங்களுக்கு மரியாதை இல்ல…சொல்லிபுட்டேன்….😭😡😡

அவ அழுதுகிட்டே என்னோட பெட் ஷீட் தலையணைய கொண்டு போய்டு போர்டிகோல விசிறி அடிச்சா. பத்ரகாளி போல வந்தவள பார்த்து எனக்கே பயமா இருந்துச்சு. விட்டா என்னையே தூக்கி வெளிய விசிறி அடிச்சிருப்பா போல.
நானே கிளம்பி போர்டிகோ வந்துட்டேன்.

படார்னு கதவ சாத்திட்டு போய்ட்டா😔

எங்க வீட்டு வெள்ளயன் வால ஆட்டிட்டு சந்தோசமா பார்த்தான்.

விசிறி அடிச்ச பெட்ஷீட் மேல உட்கார்ந்துட்டு இருக்கும்போது, திண்ணைல கெடக்கும் பக்கத்து வீட்டு பெருசு…

என்னடா கலை வெளிய இருக்க..

அது ஒன்னுமில்ல பெருசு. தெருவுல ஆள் நடமாட்டன் இருந்தா நாய் பயப்படுதான்… காவலுக்கு என்ன படுக்க சொல்லியிருக்கா என் பொண்டாட்டி…..

நாய்க்கி காவலா… நல்லா இருக்குடா.. நல்லா இருக்கு…

யோவ் போய்யா..😔😔

( புருசன் ஒரு வேகத்துல குரல உயர்த்தி கோவபட்டா மனைவி என்ன பண்ணனும். ரெண்டு அடி போட்டு அமைதியா படுடான…….. கம்னு படுத்துட்டு போறோம். இப்படி படுக்கைய வெளிய வீசுனா என்ன அர்த்தம். 😔😔.

நாங்க கொசுகடில தூங்க தான் முடியுமா? இந்தியா தான் வல்லரசா ஆக முடியுமா?)

என் தலையெழுத்த நினைச்சு வாலு ஆட்டிட்டு இருந்த வெள்ளையன் பக்கத்து படுத்துட்டு யோசிட்டு இருந்தேன்.

அப்ப தான் ஒரு யோசனை வந்துச்சு.

அடப்பாவமே நமக்குதான் வீட்டுமனையே இல்லையே😔

நாமதான் வீடே கட்டலையே😔

நாம வீட்ட சுத்தி காம்பௌண்டே போடலியே…

அடிப்பாவி…. இல்லாத ஒரு விஷயத்துக்கு, சண்ட போட்டு தொரத்தி விட்டுடியே….என்ன பண்றது…எல்லாம் விதினு நாய கட்டி பிடிச்சி தூங்கனேன்.😏😏

ரெண்டு நாளு எங்க வீட்லையே தண்டனை கைதி போல இருந்தேன். என்னால 1 hour மேல சிரிப்ப அடக்கமுடியாது. சிரிச்சிடுவேன். கல்நெஞ்சகாரி சிரிக்கவும்மாட்டா.. அப்புறம் தான் பேச ஆரம்பிச்சா.

ஏன்டி.. நாம தான் வூடே கட்டலையே..அப்புறம் ஏன்டி இவ்ளோ சண்ட…?

~ நீங்க எங்க வூட்டு ஆள பேசனா விட்றருவனா…😏

கடைசிவர அவ பண்ண தப்ப ஒத்துகலா… நான் பேசுனுதான் தப்புனு சாதிசிட்டா.😔😔

அன்னையோட அவங்க வீட்ட பத்தி பேசுறது இல்ல… பொறந்த வீட்ட பேசுனா இந்த பொம்பளைங்களுக்கு எங்க இருந்து தான் சக்தி வருதோ🤔🤔🤔🤔🤔🤔

இன்று அவளுக்கென்று வீடு கட்டி என்னால் முடிந்த சகல வசதி செய்து கொடுத்து AC ரூமில் வைத்து இருக்கேன். அப்பவும் அவ பொண்ணுங்ககிட்ட "உங்கப்பன வச்சி என்னால மாரடிக்க முடியலைனு" புலம்பிட்டு இருக்காலாம்😏😏

மனைவிகள் இலையில் ஊத்தும் ரசம் போல எந்த பக்கம் போவாங்கனே தெரியாது😲😲. நாமதான் சோறு என்கிற விவேகத்தை வச்சி அணை கட்டிட்டே இருக்கணும்.

நான் ஏற்கனே சொன்னபடி…

அவளே போலீஸ்…

அவளே வக்கில்…

அவளே நீதிபதி…

தண்டனை மட்டும் கணவர்களுக்கு.

இப்படிதான் ஓடிட்டு இருக்கு வாழ்க்க….

(எங்களுக்கு கல்யாணம் ஆகி 15 வருடம் ஆகிறது. இதுவரை என் மனைவியை அடித்ததில்லை. சண்டை போட்டு அடுத்தவரிடமும் பஞ்சாயத்துக்கு நின்னதில்லை (போடறதே சின்ன சண்டதான்). இன்னும் முக்கியமா குழந்தைகள் முன்னே குரலை கூட உயர்த்தியதில்லை நாங்கள்)

🙏🙏🏾🙏®️🅿️❣️❣️❣️



/ப.பி/