...

7 views

வியப்பு
அனைவருக்கும் வணக்கம் காளஸ்ரீயானந்த், 16/02/2022 அன்று " சென்னை புத்தகக் காட்சி " சென்னை- நந்தனம் சென்று இருந்தேன், சில புத்தகங்கள் வாங்கி கொண்டு நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பூமியின் அடியில் சுரங்க பாதை இறங்கி பயணச்சீட்டு வாங்குவதற்கு தேடி கொண்டு நடந்துகொண்டு இருக்கிறேன், அங்கே சுவரில் பெயர் பலகையில் அம்பு குறியீடு காட்டப்பட்டுள்ளது, பின் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்,
எனக்கு பின் புறத்தில் இருந்து ஒரு பெண் குரல் " இங்கே பயணச்சீட்டு எங்கே தருவார்கள் " என்று தூய தமிழில் என்னிடம் கேட்டார் அந்த இளம் பெண்,
உடனே நான் தமிழில் சொல்ல முடிய வில்லை, நான் இங்கிலிஷ் கலந்து நேம் போர்ட் ஏரோ மார்க் அதையை ப்ளோ பன்னனும் என்றேன், இளம் பெண் எனக்கு முன்பாக முன்னேறி நடந்து கொண்டு இருந்தாள், ( குறிப்பு - சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் புற நகர் வாசிகள் பெரும்பாலோனோர் மிஸ்ஸிங் தமிழ் தான் பேசி கொள்ளு வார்கள் அதனின் அடிப்படையில் என்னால் பேச முடிய வில்லை)
பெரும்பாலும் அந்த இளம் பெண் சிங்கப்பூர் அ மலேசிய தமிழ் பெண்ணாக இருக்க வேண்டும்,
எனக்கு வியப்பு யாக இருந்தது, அத்துடன் வருத்துமாய் கூட இருந்தது, இத்துடன் அந்த இளம் பெண் க்கு எனது வருத்தம் தெரிவித்து கொள்கிறேன், மன்னிக்க மாறும் வேண்டி கொள்ளுகிறேன்,
ஒரு எழுத்தாளனாக எழுத மட்டுமே முடிகிறது, மன்னித்து விடுங்கள் பேச முடிய வில்லை....
நன்றி.... வணக்கம்...

© G.V.KALASRIYANAND