...

7 views

இவள் யாரோ!- 2
முன் கதை சுருக்கம்: நான்கு நண்பர்களும் அதிசய குகைக்கு சென்று சுற்றி பார்க்கும் நேரத்தில் நர்மதா மர்மமான முறையில் இறந்து கிடந்தாள் .அவளின் இறப்பு சோகத்தை ஏற்படுத்தியது.

இனி:
அங்கு நடக்கும் சம்பவத்தை வினித்தால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.

" என்னடா ஆச்சு" கதறியபடி வந்த அன்வரை சமாதானப்படுத்தினான் அஜய்.

"இந்தக் குகையில் ஏதோ தப்பா இருக்கு "என்று சொன்ன அஜய் வினித்திடம் திரும்பி இந்தக் குகையை நன்றாக அலசிப்பார் யாராவது தென்படுகிறார்களா என்று..

வினித் விரைந்தான்.

அஜய் மனதிற்குள் ஆயிரம் யோசனைகள் "நர்மதா அம்மாவுக்கு என்ன பதில் சொல்வது நம்மை நம்பி தானே கூட அனுப்பினர் "என்று கதறிக் கொண்டிருந்தான்.

அதேசமயம் வினித்தின் இரு கைகள் ஒரு 14 வயது சிறுவனின் குரல்வளை நெரித்துக் கொண்டிருந்தது.

"யார்ரா நீ.."

அந்த சிறுவன் கண நேரத்தில் எல்லாரையும் பார்த்து பயத்தில் உறைந்து போனான்.

அஜய் இருவரின் அருகில் வந்தான் "யார்ரா இவன் எதுக்கு பிடித்து வைத்திருக்கிறாய்"

வினித்தின் பதில் அங்கிருந்து அனைவரும் ஆச்சரியத்தில் உறைய வைத்தது" நர்மதாவை கொன்னதே இவன் தான்டா"

அந்த சிறுவன் தற்பொழுது கோபமாக மாறி இருந்தான்.

"நான் ஒன்னும் கொலை செய்பவன் அல்ல"

" எப்படிடா அவ இறந்தா இந்த இடத்தில் எங்களை தவிர நீ மட்டும் தான் இருக்க அப்போ உன் மேல தான் சந்தேகம் வரும்"

அந்த சிறுவன் இப்போது கோவத்தின் உச்சியில் இருந்தான்

"நான் என்னுடைய உயிரை இழந்து விட்டதாக வருத்தத்தில் இருக்கிறேன் நீங்க வேற ஏன் என்னை சந்தேகப்படுறீங்க"

அன்வர் கோபத்தில் கத்தினான் "என்னடா உளறிக்கிட்டு இருக்க "

"நான் ஒன்னும் உளறல என் தங்கையை தேடி இங்கு வந்தேன் "

"புரியல" என்று வினீத் குழப்பமாய் முழிக்க..

அந்த அத்தியாயத்தை தொடங்கினான் அந்த சிறுவன்.

" என்னுடைய பெயர் கனிவேந்தன் எனக்கு ஒரு தங்கை இருந்தால் அவள் பெயர் ரத்தினகுமாரி நீங்கள் எல்லோரும் என்னை 14 வயது சிறுவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ஆனால் ஒரு சாபத்தால் நான் 14 வயது சிறுவனாக மாறி உள்ளேன் தற்பொழுது என் வயது 1310 ...

வாய்விட்டு சிரித்தான் அன்வர்.

"நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால் இந்த இடத்தை விட்டு செல்லலாம் உங்கள் நர்மதா தோழி உயிரோடு கிடைக்க வேண்டுமா? வேண்டாமா?..."

இந்தக் கேள்வி தன்னிடம் உண்மையாகவே கேட்கப்படுகின்றதா அல்லது கனவா என்பதைக்குள் கேட்க முடியாமல் குழம்பிக் கொண்டிருந்த அஜய்
இந்த சிறுவனை கண்ணீர் பொங்க பார்த் தான் உண்மையிலேயே "நர்மதாவை உயிரோடு கொண்டு வர முடியுமா?"
வினித் கேட்க

"முடியும்" என்று பதில்தான் அந்த கணி வேந்தன் "என்னுடைய கதையை தொடர்ந்து கேளுங்கள்"
என்று கூற ஆரம்பித்தான் கனிவேந்தன்.
" எங்கள் நாட்டில்
நான் அரசாண்ட வேளையில்
அவள் அந்த எதிர்பாராத நேரத்தில் ,வந்தால்.."

"அவள் என்றால் யார் "வினித் கேட்க

"மர்ம பெண்ணொருத்தி " குரலில் பயம் கலந்திருந்தது.

" எங்கள் நாட்டு மக்களை அனைவரையும் பைத்தியக்காரர்களாக மாற்றி விட்டு சென்று விட்டாள்"

" கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க"
என்றான் அன்வர்.

" அவள் வந்த நேரம் நாட்டு மக்கள் அவளை வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தனர். அவள் தான் நாட்டு ராணியாக வேண்டும் என மக்களிடம் அடாவடி செய்து கொண்டிருந்தாள் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு நான் அவளை எதிர்க்க துணிந்தேன்..." சிறிது நேரம் மூச்சை விட்டு விட்டு மேலும் தொடர்ந்தான் கனிவேந்தன்...

" அப்படி அவளை எதிர்க்க துணிந்தபோது நான் யோசிக்காமல் சென்று விட்டேன் என் குடும்பத்தை பற்றி என்னை அங்கு வர சொல்லிவிட்டு என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் பைத்தியக்காரர்களாக மாற்றி விட்டால் அந்த மர்ம பெண்"

" அவளுக்கு பேரே இல்லையா" என்று அன்வர் குழப்பத்துடன் கேட்க

அவர் சொன்னார் "என் காலகட்டம் 1036 அந்த சமயத்தில் அவளை மர்ம பெண் என்றுதான் அழைப்பர் "

அனைவரும் வியப்போடு கேட்டுக் கொண்டிருந்தனர்.

"சிறிது நேரம் கழித்து தான் தெரிந்தது அவள் சுற்றுவட்டாரங்களிலும் இப்படி செய்து மக்களை பைத்தியங்களாகவும் கொன்றும் குவித்து வந்திருக்கிறாள் என்று அவள் யார் என்று கடைசி வரை எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை ஆனால் அவள் மனித சக்தி இல்லை என்று மட்டும் தெளிவாக தெரிகிறது "

அஜய் ஒரு சாமர்த்தியமான கேள்வி கேட்டான்
"நீங்கள் மனிதன் தானே "

எதிர்பாராத கேள்விகள் கனிவேந்தன் திகைத்து" ஆமாம் "
என்று சொல்ல

"உங்கள் காலகட்டத்திற்கும் தற்போதைய 2024 க்கும் சம்பந்தமே இல்லையே எப்படி இவ்வளவு நாள் உயிரோடு இருக்கிறீர்கள்" குரலில் நம்பாத தன்மை தெரிந்தது பதில் அளிக்க முயன்ற கனிவேந்தனை எங்கிருந்தோ வந்த அம்பு சடார் என்று குரல்வளையை குத்தி கிழித்தது .
ரகசியங்களை சொல்லாதே என்ற அசரீரி கேட்டது .

தொடரும்...
© All Rights Reserved