...

2 views

மாயவள் அவளோ
கருப்பு வானவில்லும் தோற்று போகும் உந்தன் புருவம் முன்,
இதழ் சாயமும் போர் தொடுக்க சுற்றி இருக்கும் மலர்களும் தலை வணங்குதோ,
இமை அசைக்கும் பொழுதில் கார்மேகம் சூழ்ந்து தான் மழை மேகம் ஆட்கொண்டதோ இந்த பிரபஞ்சத்தை,
இரு விழல் செய்த மாயமோ இமை மூட மறந்த விழிகள் ஏராளமோ, கதை எழுதிடும் பேனா முனையும் மறந்து போய் நிலைத்து நின்ற நொடிகள் எத்தனையோ,
கவியோ இசையோ யாவும் உன்னை வர்ணிக்க தான் பிறப்பேடுத்ததோ,
மாலை மங்கும் வேளையில் மரகத சூரியனும் வெள்ளி நிலவின் குளிர்ச்சியும் ஒன்றாய் போட்டி போட்டு பூலோகத்தை ஆட்கொள்வது என்ன மாயமோ,
மணி நேரம் கடந்தும் கடந்து செல்ல சூரியனும் சந்திரனும்,
நடுவே சுற்றி திரியும் நட்சத்திர கூட்டமும்.
இங்கே என்ன தான் நடக்கிறதோ,
மையல் கொண்ட கவிஞன் மனதும் மலைத்து தான் நிற்கிறதே...
மாயவள் அவளோ!
© அருள்மொழி வேந்தன்