அவள் எடுத்த முடிவு
அத்தியாயம் -03
விவாகரத்து
ஆம்...குமாரின் எல்லை தாண்டிய சந்தேகப்புத்தியை இனியும் பொறுக்க முடியாது என்ற முடிவுக்கு வந்த அவள் 'விவாகரத்து' தான் இதற்கு ஒரே வழி என்று துணிந்துவிட்டாள். 'நாளைக்கு முதல் வேலையாக வக்கீலைப் பாக்க வேண்டியதுதான்' என்று மனதுள் சொல்லிக்கொண்டே செல்போனை எடுத்து தன் தோழி கலாவிடம் இது குறித்து பேசி, துணைக்கு அவளை வக்கீல் ஆஃபிஸிற்கு அழைத்தாள்.
"ஏ... கலா... என்னை நாளைக்கு எங்க வீட்ல வந்து உன் வண்டில பிக்கப் பண்ணிக்கோடி. காலை ல ஒரு 10மணிக்கு வந்துரு... இவரு காலை ல 9.30க்கு டவுனுக்குள்ள யாரையோ பாக்கப் போகணும்னு சொல்லிட்டிருந்தாரு. So... அவரு கிளம்புனதும் நான் உனக்குக் கால் பண்றேன். ஓகேவா... நாம போய் வக்கீல பாத்து பேசிட்டு... என் வீட்டுக்காரருக்கு ஒரு 'எண்டு கார்டு' போட ஏற்பாடு பண்ணிட்டு வந்துருவோம்" என்று சொல்ல" சரிடி... நான் வந்துறேன்.. நீ எதுக்கும் திரும்ப ஒரு தடவ யோசிச்சுக்கோ. அவ்ளோ தான் நான் சொல்லுவேன் "என்று சொல்லி கலா call ஐ கட் செய்தாள். 'எத்தனை முறை யோசித்தாலும் விவாகரத்து செய்ய வேண்டும் என்ற என் முடிவை இனி நான் மாற்றிக்கொள்ளப்போவதில்லை' என்று தன் மனதுக்குள் நினைத்துக்கொண்டாள் செல்வி.
ஆம்... அந்த அளவிற்கு விஷம் கக்கும் பேச்சையும் ஏச்சையும் கேட்டு கேட்டு அவளது மனம் வெந்து நொந்து போயிருந்ததுதான் இப்படியெல்லாம் யோசிக்கவும் முடிவெடுக்கவும் தூண்டுகோலாயிற்று.
-தொடரும்
@tamilthoorika
#tamilththoorikaa
#தமிழ்த்தூரிகா2023
#அவள்எடுத்தமுடிவு
#விவாகரத்து
#03jan146
#WritcoQuote
#writco
© தமிழ்த்தூரிகா