...

1 views

வேலி காத்தான்

அத்தியாயம் : 120

சூரியன் மேற்கே அடிவானில் இறங்கிக் கொண்டிருந்தான். செந்நிற கதிர்கள் வைரக் கீற்றுகளாய் மேலே எழும்பி ஜொலித்து பின் மறைய ஆரம்பித்தன.
வீர கேசர நாட்டின் கோட்டை கொத்தளங்களும், அரண்மனை அந்தப் புரங்களும் விளக்கொளியில் நனைய ஆரம்பித்தன. அரண்மனை நந்தவனத்தில் பறவைகள் அடர்ந்த மரங்களின் கூடுகளில் அடைக்கலம் தேடிக் கொண்டிருந்தன. விண்ணை பிளக்கும் அவைகளின் கீச்சிடும் சத்தம் அரண்மனை முழுக்க எதிரொலித்துக் கொண்டிருந்தது. இளவரசி மீனலோசனி தனது அந்தப்புரத்தில் பஞ்சணையில் மல்லாக்க படுத்து கிடந்தாள். அவளது இமைகள் விழிகளை மூடியும் மூடாமல் நிலைகுத்தி கிடந்தன. அவள் ஆழ்ந்த யோசனையில் தன்னை மெய் மறந்திருந்தாள். சாளரங்களின் வழியாக வீசிக் கொண்டிருந்த பலத்த ஆளைத் தூக்கும் காற்று அவள் தேகத்தை போர்த்தியிருந்த மேலாலைடையோடு போர் புரிந்து கொண்டிருந்தது. அவள் அவளாக இல்லை என்பதை அவளது தோற்றமும் தீவிர சிந்தனையும் பறைசாற்றிக் கொண்டிருந்தது. மீனலோசனி தன்னை மறந்து வேற்று உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த அந்த வேளையில் இளவரசி.. இளவரசி.. என அழைத்துக்கொண்டே மீனலோசனியின் தோழி காஞ்சிகா வந்தாள். மீனலோசனி கண்களை திறந்த பாடில்லை. மெய் மறந்து அழகிய கற்சிலை போல் கிடந்தாள். இளவரசி.. இளவரசி.. காஞ்சிகா திரும்பவும் அழைத்தாள். மீனலோசனியின் இமைகள் அசைந்தன. அவள் மெல்ல கண்களைத் திறந்தாள். அவள் எதிரில் தோழி காஞ்சிகா நின்று கொண்டிருந்தாள்.என்னடி காஞ்சிகா எப்போது வந்தாய்? பஞ்சணையிலிருந்து எழுந்தவாறே மீனலோசனி கேட்டாள். தாங்கள் கனவுலகில் சஞ்சரித்துக்
கொண்டிருந்த போதே வந்துவிட்டேனம்மா காஞ்சிகா சொன்னாள். மீனலோசனி வெட்கத்தில் நெளிந்தாள்
தொடரும்..