அவள் எடுத்த முடிவு
அத்தியாயம் -05
விபத்து
ரோட்டின் மறுபுறத்தில் யாரோ ஒருவர் வண்டியோடு கீழே விழுந்து கிடக்க அவரைச் சுற்றி ஒரு கும்பல் கூடியிருந்தது. எதிரெதிரே வந்த பைக்கில் வந்த இருவர் மோதிக்கொண்டார்கள் போலும். மோதியவரில் ஒருவருக்கு எதுவுமில்லை. கீழே விழுந்தவருக்குதான் அடி பலம். கீழேயிருந்து அவரால் எழவே முடியவில்லை.சுற்றியிருப்பவர்கள் விழுந்துகிடப்பவரை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்களேயொழிய யாரும் தூக்கி விடவுமில்லை... ஆம்புலன்ஸைக் கூப்பிடவுமில்லை. செல்வியும் கலாவும் இருந்த இடத்திலிருந்து பார்த்தால் எதுவுமே தெரியவில்லை. அந்த அளவிற்கு கூட்டம் அங்கே கூடியிருந்தது.
"ஏ... என்னடி சத்தம் அது... அங்க என்ன கூட்டம்...?" என்று செல்வி கேட்க, "இல்லடி... அங்க டூ வீலர்ல வந்த ரெண்டு பேரு மோதி விழுந்துட்டாங்கடி... அதான் சத்தம் கேட்டு நிப்பாட்டுனே....அந்த வண்டில வந்தவர பாத்தா...."என்று சொல்லி இழுத்தாள் கலா.
"பாத்தா... சொல்லுடி... என்ன... சொல்லு.. உனக்குத் தெரிஞ்சவங்களா அது" என வினவினாள் செல்வி.
"இல்லடி... அது... வந்து...வந்து...அவரு உன் ஹஸ்பண்ட் மாறி இருந்துச்சுடி. அதான் சடனா வண்டிய நிப்பாட்டுனேன்" என்று கலா சொல்லி முடிப்பதற்குள் அந்த கும்பலை நோக்கி ஓடினாள் செல்வி. வண்டியை ஓரங்கட்டிவிட்டு கலாவும் அவள் பின் ஓடினாள்.
அதற்குள் கூடி நின்ற கூட்டத்துக்குள் புகுந்து விட்டாள் செல்வி. ஆட்களை விலக்கிக்கொண்டு உள்ளே நுழைந்த செல்வி கீழே விழுந்து கிடந்தவரைப் பார்த்ததும் அவளுக்கு உயிரே போனது போல் இருந்தது. அங்கே கிடந்தவன் அவளது கணவன் குமார் தான்.
-தொடரும்
@tamilthoorika
#tamilththoorikaa
#தமிழ்த்தூரிகா2023
#அவள்எடுத்தமுடிவு
#விபத்து
#05jan150
© தமிழ்த்தூரிகா