...

18 views

அவள் எடுத்த முடிவு
அத்தியாயம் -01

சண்டை

மெயின் ரோட்டிலிருந்து கிழக்கில் இறங்கிச் சென்ற தெருவில் வலது கடைசியிலிருந்த வீட்டிலிருந்து சத்தம் வெளியே கேட்டுக்கொண்டிருந்தது.
"சரிதான் போடி... நீ எங்கயாவது போய் தொலை... அப்ப தான் எனக்கு நிம்மதி..." என்ற ஆண் குரலுக்குச் சொந்தக்காரர் குமார்.
"நான் ஏன் போகணும்... இந்த வீடு என் பேர்ல இருக்கு..." என்ற பெண் குரலுக்குச் சொந்தக்காரி செல்வி.
குமாரின் சந்தேகப் புத்தி தான் அவர்களுக்குள் நடந்த... நடக்கின்ற... நடக்கப் போகிற சண்டைக்கெல்லாம் மூல காரணம். செல்வி என்னவோ நல்லவள் தான் ; ஒழுக்கமானவள் தான் ;ஆனால், அவளுடைய கணவனுக்குத் தான் அவள் மேல் நம்பிக்கை வந்தபாடில்லை . செல்வி யாருடன் பேசினாலும் சந்தேகம்; எந்த ஆணாவது வீட்டுக்குள்... இல்லையில்லை... வீட்டுக்கு வெளியே நின்று அட்ரஸ் கேட்டாலும் கூட குமாருக்குச் சந்தேகம் தான். அன்று முழுவதும் செல்வி பாடு... திண்டாட்டம் தான்.
அன்றும் அப்படித்தான் சண்டை ஆரம்பித்தது.
அன்று காலையில் பேப்பர் போட வந்த பையனிடம், " தம்பி! எங்க வீட்ல நாயிருக்குப்பா... நீ பேப்பர வீசிட்டு போனா அத.. நாய் எடுத்து கடிச்சி வீணாக்கிடுதுப்பா... பேப்பர் வாங்கியும் படிக்க முடியாம வேஸ்ட்டா போகுதுப்பா... அதனால... நீ கேட் ல(gate) நாய்க்கு எட்டாம சொருகி வைப்பா... பழைய பையனுக்குத் தெரியும்... நீ புதுசில்ல... அதான் சொல்றேன்ப்பா... "என்று செல்வி சொல்ல அவனும் "சரிக்கா... இனிமே கரெக்டா வச்சிடுறேன் க்கா", சொல்லியாவாறே சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான்.
-தொடரும்
@tamilthoorika
#tamilththoorikaa
#தமிழ்த்தூரிகா2023
#அவள்எடுத்தமுடிவு
#அத்தியாயம்-01
#சண்டை
#01jan141

© தமிழ்த்தூரிகா